• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பானில் 2-ம் உலக போரில் அணுகுண்டு வீச்சில் தப்பியவர் மரணம்

September 1, 2017 தண்டோரா குழு

ஜப்பானில் இரண்டாம் உலக போரின் போது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு வீச்சில் காயத்துடன் உயிர் தப்பிய டானிகுச்சி(88) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் நேற்று உயிரிழந்தார்.

கடந்த 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் இறுதியில், ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நாகாசாகி ஆகிய இரண்டு நகரங்கள் மீது அமெரிக்க அணுகுண்டை வீசியது.இதில் சுமார் 7௦,௦௦௦ பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.அப்படி உயிர் தப்பியவர்களில் டானிகுச்சியும் ஒருவர்.

இச்சம்பவம் நடந்தபோது அவருக்கு 16 வயது, சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.8 கிலோமீட்டர் தூரத்தில் தனது சைக்கிளில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, அணுகுண்டு வீசப்பட்டது.அதில் அவருடைய முதுகு மற்றும் இடது கையில் பலத்த தீ காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். பின்னர் தபால்காரராக பணி செய்தார்.

இதன்பிறகு, அணுகுண்டு தயாரிப்பு மற்றும் அதை பயன்படுத்துவதை எதிர்த்து போராடி வந்தார். அதன் காரணமாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டது. கடைசியாக அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நோய்க்கு கூட அணுகுண்டு வீச்சு தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 31) காலமானார்.

மேலும் படிக்க