August 31, 2017 
தண்டோரா குழு
                                ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் தொலைந்து போனால் உடனடியாக மாற்று ஆவணம் பெற  போலீஸ் இணையதளத்தில் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருந்தால் தொலைந்து போகும் அபாயம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, தொலைந்து போகும் ஆவணங்களுக்கு உடனடியாக மாற்று ஆவணம் அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஓட்டுநர் உரிமம்,மட்டுமின்றி வாகன பதிவு,பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்துறை இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்றுபெறும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, eservices.tnPolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்தில் சென்று பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.