August 30, 2017 
தண்டோரா குழு
                                பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நாளையுடன்(ஆகஸ்ட்31) முடிவடைகிறது. 
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், ‘பான்’ எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.இதன் மூலம் போலி பான் கார்டுகள் நீக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. 
இதனையடுத்து பான் கார்டுடன் ஆதார் இணைக்க, ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் அளித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.
மேலும் இதுவரை இணைக்காதோர், income taxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் ‘linkaadhaar’ என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இருஎண்களை இணைக்க முடியும்.