August 30, 2017
தண்டோரா குழு
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
குற்றாலம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் இதனால் ஏமாற்றுத்துடன் சென்றனர். எனினும் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.