• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வினோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கான விசேஷ போட்டோ ஷூட்

August 29, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் அரிய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை ஒரு நாள் ஹீரோவாக வைத்து அவர்களுக்கு விசேஷ “போட்டோ ஷூட்” நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அமெரிக்காவின் உட்டா மாகணத்தின் சாண்டி நகரை சேர்ந்த சைமன் என்ற 5 வயது சிறுவனுக்கு,சிறுநீரகத்தின் மேல் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு கீமோதெரபி, அறுவை சிகிச்சை, மற்றும் பல்வேறு சிகிச்சைகள் தரப்பட்ட பிறகும், புற்றுநோய் குணமாகவில்லை.

சைமன் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில்,வினோத நோயினால் பாதிக்கபட்ட பல சிறுவர் சிறுமிகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் சிறுவர்கள் கதை புத்தகங்களில் வரும் ‘ஜஸ்டிஸ் லீக்’ கதாபாத்திரங்களில் அலங்கரித்து அவர்களை “போட்டோ ஷூட்” எடுக்க பிரபல புகைப்பட நிபுணர் ஜோஷ் ரோசி முன் வந்தார்.

அதன்படி, சைமனை ‘பேட்மேன்’ போலவும், இரண்டு கால்களை இழந்து, செயற்கை கால்கள் மூலம் நடக்கும் ஐந்து வயது சிறுமி கய்டேன் கிங்கிலேவை ‘சைபோர்க்’ போலவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி சோபி லோப்டசை ‘வண்டர் வுமன்’ போலவும், லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது சிறுமி மாடிசே மனுமாவை ‘அக்குவாமேன்’ போலவும், இருதய கோளாறால் பிறந்த ஒன்பது வயது சிறுவன் டீகன் பெட்டிட்டை ‘சூப்பர்மேன்’ போலவும், எடிஎச்டி நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன் ஜேயடேன் ஸ்ட்ரோல்ரோவை ‘பிளாஷ்’ போலவும் மருத்துவ ஊழியர்கள் தயார் செய்தனர். அதன் பிறகு, அவர்களை புகைப்பட நிபுணர் ஜோஷ் ரோசி புகைப்படம் எடுத்து, அவர்களை மகிழ்ச்சிபடுத்தினார்.

மேலும் படிக்க