August 26, 2017
தண்டோரா குழு
தனியார் தொலைகாட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தையே அடைந்தவர் ஓவியா. இவர் இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போதெல்லாம் பார்க்கவே பிடிக்கவில்லை என பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஓவியா விட்டா வேற யாரு படத்தை தயாரித்த மதுரை செல்வம் படத்தை வெளியிட மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாராம். இதனை அறிந்த ஓவியா தான் அவருக்கு உதவிகள் செய்தாராம். இதுமட்டுமின்றி பட ப்ரோமோஷனுக்கும் தான் வருவதாக கூறியுள்ளாராம். ஓவியா இவ்வாறு செய்திருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.