• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரை காப்பாற்றிய இளைஞருக்கு ஆம்புலன்ஸ் சேவையில் துணை மருத்துவ பணி

August 26, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் தொண்டையில் உணவு சிக்கி மூச்சு விடமுடியாமல் இருந்தவருக்கு முதல் உதவி செய்ததன் விளைவாக, ஒரு இளைஞருக்கு ஆம்புலன்ஸ் சேவையில் துணை மருத்துவ பணி கிடைத்தது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தின் சாக்ரமெண்டோ நகரை சேர்ந்த வில் ஸ்டீவர்ட் துணை மருத்துவ பணியில் சேர அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அவருடைய விண்ணப்பத்தை கண்ட அந்த மருத்துவமனை அதிகாரி, நேர்காணலுக்கு வரவேண்டும் என்று தகவல் அனுப்பினார்.

இதையடுத்து, அந்த நேர்காணலுக்கு செல்லும் முன், சாக்ரமெண்டோ நகரிலிருந்த உணவு விடுதியில் உணவருந்த சென்றார். அப்போது, அங்கு உணவருந்திக்கொண்டிருந்த மற்றொருவருக்கு, உணவு தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டது.உடனே ஸ்டீவர்ட், தொண்டையில் சிக்கிருந்த உணவை வெளியே எடுக்கும் ‘ஹெம்ளிச் மனேவர்’ சிகிச்சையை தந்தார். இதனால் தொண்டையில் சிக்கியிருந்த உணவு வெளியே வந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு, ஆம்புலன்ஸ் சேவை மேற்பார்வையாளர் பிரெட் மோட்லோ என்பவர் ஸ்டீவர்டை நேர்கானல் எடுத்தார்.

அதன் பிறகு, இருவரும், சம்பவம் நடந்த இடத்திற்கு மீண்டும் வந்தனர். ஸ்டீவர்ட் ஆம்புலன்ஸ் சேவையின் துணை மருத்துவ பணியில் சேர முயற்சி செய்தார் என்று தெரியவந்தது. உடனே, ஸ்டீவர்டு ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றிய சம்பவத்தை அந்த அதிகாரியிடம் அந்த உணவு விடுதியின் உரிமையாளர் தெரிவித்தார். அதை கேட்ட அந்த அதிகாரி, ஸ்டீவர்டுக்கு ஆம்புலன்ஸ் சேவையின் துணை மருத்துவ பணியை கொடுத்தார்.

வரும் அக்டோபர் மாதம் முதல், சாக்ரமெண்டோ நகரின் சான் லூயிஸ் ஆம்புலன்ஸ் சேவையில் தனது பணியை ஸ்டீவர்ட் தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க