• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காணாமல்போன நாயை கண்டுபிடிக்க வீதியில் சுற்றித்திரிந்த வாலிபர்

August 26, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் சம்ப்லீ நகரிலுள்ள டிகல்ப் விலங்கு காப்பகம் ஒன்று உள்ளது. அந்த காப்பகத்திற்கு முன் ஒரு வாலிபர் இரவு பலராக சுற்றித் திரிந்து அங்கே உறங்கி கொண்டிருந்தார்.

இதனைக்கண்டு அதன் உரிமையாளர் ஜார்விஸ் ஸ்மித் அவரை எழுப்பி விவரம் கேட்டார். அப்போது தனது நாய் டாடா காணாமல் போய்விட்டது என்றும் அது ஒரு வேலை இங்கு வந்திருக்கலாம் என்று எண்ணி, அங்கு வந்ததாக தெரிவித்தார். இதனால் அவர் மீது இரக்கம் கொண்ட அந்த காப்பகத்தின் உரிமையாளர் அவருக்கு உணவு வழங்கினார். அவருடைய நாய் அங்கில்லை என்ற விவரத்தை ஜார்விஸ் தெரிவித்தார்.

மேலும்,அந்த நாயை குறித்து வேறு சிலரிடம் விசாரித்த போது, அந்த நாய் வேறு காப்பகத்திலிருப்பது தெரிய வந்தது. உடனே, அந்த நாயின் உரிமையாளர் அவருடைய நாயுடன் சேர, ரயில் பயணத்திற்கு தேவையான பணத்தை ஜார்விஸ் கொடுத்தார்.

அந்த நபரும், ஜார்விஸ் தந்த பணத்தை ஏற்றுக்கொண்டு, தனது காணாமல்போன நாயை மீண்டும் சேர்ந்துக்கொள்ள சென்றார். டாடா இருக்கும் இடத்தை அடைந்து, அதனுடன் மீண்டும் சேர்ந்தார். அவர்கள் மீண்டும் இணைந்ததை அந்த காப்பகத்தின் உரிமையாளர் டிரேசி தாம்சன் காணொளி எடுத்தார். அந்த காணொளி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க