• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்த மனைவியின் உடலை சுமந்து சென்றவருக்கு குவியும் உதவிகள்

August 26, 2017 எலிசபெத்

சுமார் ஓர் ஆண்டுக்கு முன்னர் ஓடிஸா மாநிலத்தில் இறந்த மனைவியின் உடலை கொண்டு செல்ல அம்புலன்ஸ் மறுக்கப்பட்டுதாலும், அவரிடம் பணம் இல்லாத காரணத்தினாலும், மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றார். தற்போது அவருக்கு பலரிடம் இருந்து உதவிகள் குவிய தொடங்கியுள்ளன.

இவர் அவருடைய கிராமம் வரை மனைவியை தூக்கி சென்ற புகைப்படம் இணைய தளத்தில் வைரலாக பரவியது. அதை பார்த்த மக்களின் உள்ளங்கள் உடைந்து போயின.

அந்த சம்பவம் நடந்து, ஒரு ஆண்டிற்கு பிறகு, அந்த குடும்பத்தில் பல மாற்றங்கள் உண்டாகியுள்ளது. அந்த பரிதாபமான சம்பவத்தை குறிந்து கேள்விபட்ட மக்கள், அவருக்கு நன்கொடை தந்தது உதவினர்.

அந்த நன்கொடையால், அவருக்கு சுமார் 37 லட்சம் கிடைத்துள்ளது. அந்த தொகையை கொண்டு, அவருடைய 3 மகள்களை புவனேஸ்வர் நகரிலுள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர்.

ஓடிஸா மாநில அரசு, இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ், அவருக்கு ஒரு வீட்டை வழங்கியுள்ளது. அதோடு பஹ்ரைன் நாட்டின் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா, சுமார் 9 லட்சம் ரூபாய் காசோலையை அவருக்கு வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க