August 22, 2017 
தண்டோரா குழு
                                தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும்,தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
இரு அணிகள் இணைப்பிற்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு  எம்எல்ஏக்கள் இன்று ஆளுநரிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டுமென்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.