• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரட் குலோப் ஜாமுன்

March 22, 2019 koodal.com

தேவையான பொருள்கள்:-

பிரட் ஸ்லைஸ் – 5 அல்லது 6
பால் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்
வாசனைக்கு ஏலக்காய்
பிடித்தமான எஸன்ஸ், குங்குமப்பூ

செய்முறை:-

பிரட்டின் ஓரங்களை கட் பண்ணி எடுத்து விட்டு, கைகளினால் நன்றாக பிரட்டை பொடித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலை விட்டுப் பிசைய வேண்டும். கைகளினால் உருட்டும் பதம் வந்ததும் பாலை நிறுத்தி விடவும். நன்கு பிசைந்த பிரட்டை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அடுப்பில் சர்க்கரை தண்ணீர் இரண்டையும் ஒன்றாகக் கலந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும். பின்பு இறக்கி வைத்து ஏலப்பொடி, எஸன்ஸ், குங்குமப்பூ போட வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் உருட்டி வைத்த பிரட் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன் நிறமாக வறுத்து உடனே சர்க்கரைப் பாகில் போட வேண்டும். சிறிது நேரம் ஊறிய பிறகு மிகவும் சாஃப்டாக இருக்கும். இதை 10 நிமிடத்தில் தயாரித்து விடலாம்.

மேலும் படிக்க