• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குளிக்காமல், நீச்சல் குளத்தை பயன்படுத்தக்கூடாது!

August 16, 2017 தண்டோரா குழு

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஒரு விடுதியில், யூத மக்களை புண்படுத்தும் வகையில் அறிக்கை போடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு உலகெங்கும் உள்ள மக்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்வது வழக்கம்.
ஆனால், சமீபத்தில் அங்கிருந்த Paradies Apartment Hotelலில் நீச்சல் குளத்திற்கு வரும் யூத மக்கள் குளித்துவிட்டு வரவும். அதை பின்பற்றவில்லையென்றால் நீச்சல் குளத்திற்கு வர அனுமதியில்லை என்றும் அங்கிருக்கும் Facility Refregirator மட்டுமே அவர்கள் உபயோகிக்க முடியும் என்ற அறிக்கை போடப்பட்டிருந்தை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிக்கையை புகைப்படம் எடுத்த ஒருவர், அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த அறிக்கையை பார்த்த இஸ்ரேல் நாட்டின் துணை வெளியுறவு துறை அமைச்சர் அந்த அறிக்கையை உடனே நீக்க வேண்டும் என்று அந்த விடுதியின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

“அங்கு வரும் சில யூத விருந்தினர்கள் குளிக்காமல், நீச்சல் குளத்தை பயன்படுத்துகின்றனர் என்றும், கண்ணாடி உணவு அலமாரியில் வைக்கப்படிருக்கும் உணவு மற்றும் குளிர்பானங்களை குளிக்காமல் எடுக்கின்றனர் என்று எனக்கு புகார் வந்தது. அதனால் தான் அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டேன். என் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த விடுதியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க