August 16, 2017 
தண்டோரா குழு
                                பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் விடிய விடிய கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளிலும் மழைநீர் உள்ளே புகுந்தது. வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். 
வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூர் பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.  இந்நிலையில் கன மழை அடுத்த 3 நாள்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கனமழையின் காரணமாக பாதிப்பு ஏதும் வாராமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் தாயார் நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.