• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோர்டான் நாட்டின் விலங்கு அருங்காட்சியகத்தில் பிறந்த சிங்கக்குட்டி

August 15, 2017 தண்டோரா குழு

ஜோர்டான் நாட்டின் விலங்கு அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பெண் சிங்கம் அழகிய குட்டியை ஈன்றுள்ளது.

சிரியா நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரால், பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பலர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டனர். அல்லேப்போ நகர் முழுவதும் தரைமட்டம் ஆக்கபட்டது. அல்லேப்போ நகரிலிருந்த விலங்கு அருங்காட்சியகத்திலிருந்த விலங்குகள் அனாதைகளாக விடப்பட்டது.

இதை அறிந்த Four Paws என்னும் விலங்குகள் மீட்பு அமைப்பு, அந்த விலங்குகளை விடுவிக்க முன் வந்தனர். அதன்படி, அங்கிருந்த விலங்குகளை சிரியாவிலிருந்து 375 மைல் தூரத்திலுள்ள வட ஜோர்டான் நாட்டிலுள்ள ‘ஆள் மாவா’ என்னும் இயற்கை மற்றும் வன சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கொண்டு செல்லப்பட்ட ‘டாணா’ என்னும் பெண் சிங்கம் ஒன்று அழகிய குட்டியை ஈன்றுள்ளது.

‘பெண் சிங்கங்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது, பிறந்த குட்டியை கொன்றுவிடும் சுபாவம் உடையது. அதேபோல், 375 மைல் தூரம் பயணம் செய்த பிறகு, ஒரு புதிய இடத்தில் குட்டியை ஈன்ற மன அழுத்தத்தால், பிறந்த குட்டியை கொன்று விடுமோ என்று கவலை அடைந்தோம்.

ஆனால், பிறந்த குட்டியை அன்போடு கவனித்துக்கொண்டது.மேலும் டாணாவிற்கு நடத்திய Ultrasound scan னில் இரண்டு குட்டிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. மற்றொரு குட்டியின் பிறப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க