சசிகலா தலைமையிலானவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
காங்கிரஸ்காரர்கள் தான் ஊழல் செய்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். சிதம்பரம், அவரது மகன் கார்த்தி விரைவில் சிறைக்கு செல்வார்கள்.காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சிறையில் தான் நடைபெறும் என்றார்.
அப்போது அதிமுக அணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது,
சசிகலா தலைமையிலானவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க. அதிமுகவுக்கு தலைமை சசிகலாதான்.அதிமுக கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தவறு செய்து விட்டது.இது தொடர்பான விஷயத்தில் சில நிமிடங்களில் எடுக்க வேண்டிய முடிவை வாதாடி பெற சரியான ஆள் இல்லை என்றார்.
மேலும், திமுக துணிச்சல் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரட்டும் என்றும் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு