• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கின்னஸ் சாதனை படைத்த முதியவர் காலமானார்

August 12, 2017 தண்டோரா குழு

உலகிலேய அதிக வயதானவர் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்த இஸ்ரேலைச் சேர்ந்த கிறிஸ்டல் காலமானார்.

இரண்டாம் உலகப்போரின்போது, சுமார் 6 மில்லியன் அப்பாவி யூத மக்கள் கொல்லப்பட்டனர். அந்த பேரழிவிலிருந்து, தப்பிய இஸ்ரேல் கிறிஸ்டல், தனது 113வது வயதில் இஸ்ரேல் நாட்டில் காலமானார்.

கடந்த 1903ம் ஆண்டு, செப்டம்பர் 15ம் தேதி, போலந்து நாட்டில் பிறந்தவர்.முதலாம் உலகப் போருக்கு பிறகு, போலந்து நாட்டின் லோட்ஸ் என்னும் இடத்திருக்கு குடிபெயர்ந்தார்.அங்கேயே திருமணம் செய்துக்கொண்ட அவர் மிட்டாய் தொழிலை செய்து வந்தார்.அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனி நாட்டின் நாஸி படையினர், அந்த இடத்தை கைப்பற்றினர். அங்கு வாழ்ந்து வந்த யூத மக்கள் Auschwitz Birkenau முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த முகாமில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் இறந்துவிட்டனர்.

கடந்த 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது, கிறிஸ்டல் மட்டும் உயிர் தப்பினார். அப்போது அவருடைய உடல் எடை வெறும் 37கிலோ. பிறகு, இஸ்ரேல் நாட்டிற்கு குடிபெயர்ந்து மறுமணம் செய்துக்கொண்ட அவருக்கு 2 பிள்ளைகள், 9 பேரப் பிள்ளைகள் மற்றும் 32 கொள்ளு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் மத பழக்கத்தின்படி, பெண்களுக்கு 12 வயதும்,ஆண்களுக்கு 13 வயது ஆனவுடன் தான் மத வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும். அந்த வயது வந்த சிறுவர் சிறுமிகளுக்கு ‘பார் மிட்ஸ்பா’ என்னும் சிறப்பு விழா கொண்டாடப்படும்.

ஆனால், கடந்த 1916ம் ஆண்டு கிறிஸ்டலின் தாயார் இறந்ததாலும், முதல் உலகப்போரின்போது அவருடைய தந்தை ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்து வந்ததாலும், அவர் வீட்டில் அந்த விழா அப்போது நடத்தப்படவில்லை.அதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவருக்கு அந்த விழா நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க