• Download mobile app
25 Jan 2026, SundayEdition - 3637
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெக்டொனால்ட் சீஸ் பர்கரில் புழுக்கள்!

August 12, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் பிரபல மேக் டொனால்ட் உணகவத்தில் புழுக்கள் இருந்த சீஸ் பர்கர் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேரிபோரோ நகரிலுள்ள பிரபல மேக் டொனால்ட் உணகவத்திற்கு, ஒரு தாய் தன்னுடைய 3 வயது மகனுடன் சென்றுள்ளார்.கடைக்கு சென்ற பிறகு சீஸ் பர்கர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.சிறிது நேரத்தில் அந்த உணவு பரிமாறப்பட்டது.அந்த உணவை சிறிது சாப்பிட்ட பிறகு அதில் புழுக்கள் இருப்பதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே அந்த உணவை தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். “என்னுடைய மகனுக்கு மேரிபோரோ நகரிலுள்ள மேக் டொனால்ட் உணகவத்தில் சீஸ் பர்கருக்கு ஆடர் செய்தேன். அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.

விசாரணையின்போது, சாட்சி வேண்டும் என்பதற்காக, எங்களுக்கு பரிமாறப்பட்ட உணவை பத்திரப்படுத்தியுள்ளேன்; அந்த உணவு வாங்கிய ரசீதையும் பத்திரமாக வைத்துள்ளேன் என்று அந்த புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

“எங்கள் உணவகத்தில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும்” என்று அந்த உணவக அதிகாரி தெரிவித்தார்.

மேலும்,கடந்த மார்ச் மாதம், கொல்கத்தாவிலுள்ள மேக் டொனால்ட் உணவகத்தில் இறந்த பல்லி இருந்த உணவு பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க