August 11, 2017
தண்டோரா குழு
மதுரை மாவட்டம் மேலூரில் வரும் 14 -ம் தேதி டிடிவி தினகரன் கலந்துகொள்ள உள்ள பொதுக் கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் ஆதரவாளர் ஒருவர் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அம்மனுவில், ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் டிடிவி தினகரனும் பங்கேற்க உள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கியோ அல்லது மனுவை நிராகரித்தோ காவல்துறை சார்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்,” என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது பொதுகூட்டத்திற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.