• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

Blue Whale விளையாட்டால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவன்

August 11, 2017 தண்டோரா குழு

மத்தியபிரதேசத்தில் ஆபத்தான Blue Whale விளையாடிய பள்ளி மாணவன், தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளான்.

மத்திய பிரதேஷ் மாநிலத்தின் இந்தூர் நகரிலில் 7ம் வகுப்பு மாணவன் ஒருவன்,ஆபத்தான Blue Whale விளையாடியுள்ளான். அந்த விளையாட்டை சுமார் 50 நாட்கள் விளையாட வேண்டும். அந்த விளையாட்டின் இறுதியில் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்பது அந்த விளையாட்டின் விதியாகும்.

மேலும் அந்த மாணவன், அவனுடைய தந்தையின் கைபேசியில் அந்த விளையாட்டை விளையாடியுள்ளான். 50வது நாளின் முடிவில், அவனுடைய பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளான். அதிர்ஷ்ட வசமாக, அவனை சரியான நேரத்தில் கவனித்த அந்த பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர், அவனை காப்பற்றியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த இந்தூர் காவல் துறையினர், சம்பவம் நடந்த பள்ளிக்கு விரைந்தனர். அந்த மாணவனின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அந்த மாணவனும் அவனுடைய நண்பர்களும் அவன் Blue Whale விளையாடியது குறித்து தெரிவித்துள்ளனர்.

அதை விளையாடுவோர், அதன் ஒவ்வொரு நிலையை முடித்த பிறகு, கூர்மையான கருவியால் தங்கள் கைகளில் வெட்டு காயத்தை ஏற்படுத்த வேண்டும், 50 நாட்களில் 50 வெட்டு காயங்கள் இருக்க வேண்டும் என்பது அந்த விளையாட்டின் மற்றொரு விதியாகும். ஆனால், அந்த மாணவனின் கையில் அது போன்ற வெட்டு காயம் இல்லை. தங்கள் மகன் இவ்வளவு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறான் என்று அவனுடைய பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும்,இந்த விளையாட்டால், உலகம் முழுவதிலும் சுமார் 100 பேர் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க