• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விசா இல்லாமலேயே கத்தார் நாட்டிற்கு செல்ல அனுமதி

August 10, 2017 தண்டோரா குழு

இந்திய உள்ளிட்ட 80 நாடுகளிலிருந்து விசா இல்லாமலேயே கத்தார் நாட்டிற்கு செல்ல கத்தார் அரசு அனுமதி அளித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாடு, தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதாக சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் குற்றம்சாற்றினர். ஆனால், அதை கத்தார் நாடு மறுத்தது. இதையடுத்து, அந்த நாடுகள், கத்தார் மீது தடைவிதித்தது. இதனால் கத்தார் நாட்டின் பொருளாதாரம் குறைந்தது.

அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்திய உள்ளிட்ட 80 நாடுகளிலிருந்து விசா இல்லாமலேயே கத்தார் நாட்டிற்கு செல்லும் ஒரு புதிய அறிவிப்பை அந்நாடு அறிவித்துள்ளது.

எரிவாயு சக்திக்கொண்ட கத்தார் நாட்டிற்கு, இந்திய, லெபனான், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்கள் தனியாக விசா வாங்கத் தேவையில்லை. அந்த நாட்டு விமானநிலையத்தில் இறங்கியவுடன் “Visa on Arrival” முறையில் அங்கேயே விசா வழங்கப்படும். 33 ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருபவர்கள் 180 நாட்களும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 47 நாடுகளிலிருந்து வருபவர்கள் 30 நாட்கள் விசா இல்லாமலேயே கத்தார் நாட்டில் இருக்கலாம் என்று அந்த நாடு அறிவித்துள்ளது.

மேலும் வரும் 2022ம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டியை கத்தார் நாடு நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க