கென்யா நாட்டில் குடியரசு தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த பெண் வாக்கு சாவடியில் குழந்தை பெற்று, வாக்களித்த சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கென்யா நாட்டில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்று வருகிறது.மேற்கு போகோட் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு பாலினா செமனாங் என்னும் நிறைமாத கர்ப்பிணி பெண்,வாக்களிக்க வந்துள்ளார்.அங்கு வந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த பெண்கள், குழந்தையை பெற்றெடுக்க பாலினாவுக்கு உதவி செய்துள்ளனர். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு தகவல் தந்துள்ளனர். உடனே அவர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர். பாலினாவையும் அவர் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். மருத்துவர்கள் குழந்தைக்கு தாய்கும் சிகிச்சை அளித்துள்ளனர். இருவரும் சுகமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு, பாலினா வாக்கு சாவடிக்கு திரும்பி தனது வாக்கை அளித்துள்ளார். “வாக்கு சாவடியில் குழந்தையை பெற்றெடுத்து, ஒரு குடிமகள் வாக்களிக்கும் உரிமையை நேர்த்தியாக செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பலர் ஆச்சரியப்பட்டனர்.
பாலினா போகாட் இனத்தை சேர்ந்வர்.பாலினா தன் மகளுக்கு ‘செப்குரா’ என்று பெயரிட்டுள்ளார். ‘செப்குரா’ என்ற பெயருக்கு ‘தேர்தல்’ என்று அர்த்தம்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு