• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வன்2 வில் நடிக்க போவது ரஜினியா? விஜயா?

August 8, 2017 தண்டோரா குழு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரகுவரன்,மனீஷா கொய்ராலா,வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் `முதல்வன்’

இப்படம் அர்ஜுன் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு இடையே நடக்கும் அரசியல் மோதல் கதையாக உருவாகி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படம் பாலிவுட்டில் `நாயக்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.அதில் நடிகர் அனில் கபூர், நடிகை ராணி முகர்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், `முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை தற்போது தயாராகியுள்ளதாக `பாகுபலி’ இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், எழுத்தாளருமான கே.வி. விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது இப்படத்தில் கதாநாயகனாக யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனே இப்படத்திலும் நடிப்பாரா? அல்லது ரஜினி, விஜய் யாரேனும் நடிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

மேலும் படிக்க