• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ளஅமெரிக்கத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெஸ் பொறுப்பேற்பு

August 7, 2017 தண்டோரா குழு

சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெஸ் பொறுப்பேற்றுக் இன்று கொண்டார்.

இது குறித்து ராபர்ட் பர்ஜெஸ்,

அமெரிக்க-இந்திய உறவின் முக்கியமான இக்காலகட்டத்தில், தென்னிந்தியாவில் அமெரிக்க அரசின் பிரதிநிதியாகப் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் பற்றி அறிந்துகொள்ளவும் இருதரப்பு நல்லுறவை முன்னெடுத்துச் செல்லவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்கிறார்.

ராபர்ட் பர்ஜெஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், தலைநகர் வாஷிங்டனில் இயங்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவு சார்ந்த பிராந்திய பிரச்சினைகளைக் கையாளும் அலுவலகத்தில் இயக்குநராகவும் தாஜிகிஸ்தானிலுள்ள துஷான்பே அமெரிக்கத் தூதரகத்தில், துணைத் தலைமைத் தூதராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மேலும்,பிஷ்கெக் (கிர்கிஸ்தான்), பாகு(அஜர்பெய்ஜான்), லிலோங்வே (மால்வி), கராச்சி (பாகிஸ்தான்) ஆகிய இடங்களிலும் அமெரிக்க வெளியுறவு அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறார்.வெளியுறவுப் பணிக்கு வரும்முன், வழக்கறிஞராகப் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க