பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா காதல் தோல்வி மற்றும் உடல் நிலை காரணமாக வெளியேற்றப்பட்டார்.இதனால் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு கருத்து தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில், ஓவியாவை திருமணம் செய்துகொள்ள நான் தயார் என நடிகர் சிலம்பரசன் அவரது டுவிட்டர் பதிவில் கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
இந்நிலையில் இது குறித்து நடிகர் சிம்பு பேசுகையில்,
எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி எனக் கூறியுள்ளார்.
மேலும்,இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.எந்த ஒரு ஊடகத்துக்கும் உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான். இது போல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கௌண்ட்டுகளால் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்