• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில் நிலையத்தில் 600 கார் நிறுத்தும் அளவிற்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி

August 5, 2017 தண்டோரா குழு

கோவை ரயில்நிலையத்தில் 600 கார் நிறுத்தும் அளவிற்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே சேலம் கோட்ட மண்டல் மேலாளர் ஹரிஷங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

தென்னக ரயில்வே சேலம் கோட்ட மண்டல் மேலாளர் ஹரிஷங்கர் வர்மா கோவை ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து தவறான புரிதல் உள்ளது. முறையான திட்டமிடல் அடிப்படையிலேயே பணிகள் நடைபெறுகிறது.

ரயில் நிலையம் முன்பு வைக்கப்படவுள்ள பழைய எஞ்சின் இருபுறமும் 5 மீட்டர் அளவிற்கு பொதுமக்கள் செல்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, ரயில் நிலையம் வாயில் வரை கூரை அமைக்கப்படவுள்ளது.

இதனால் பொதுமக்கள் மழை, வெயிலுக்கு ஒதுங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையம் நுழைவாயில் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது.

மேலும், அரசு-தனியார் முயற்சியில் கார் பார்க்கிங் நிர்வகிக்க 2 முறை ஏலம் விடப்பட்டும் யாரும் முன்வராததால். இரு சக்கர பார்க்கிங்கை அரசே நடத்தப்படவுள்ளதாகவும் அடுத்தாண்டு ஜூலைக்குள் 600 கார் நிறுத்தும் அளவிற்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்.

2-3 மாதங்களில் பணிகள் துவங்கப்பட்டு 7-8 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்.32 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், 8 சிசிடிவி கேமராக்கள் ரயில் நிலையம் வருகை, வெளியே செல்வதை கவனிக்க அமைக்கப்படும்.

அக்டோபரில் பணிகள் முடிக்கப்படும்.பெங்களூர்-கோவை இடையிலான ரயிலுக்கு குறைவாகவே பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளதாகவும்.10-15 நாட்களில் புதிய இஞ்சின்கள் பொருத்தப்பட்டு 2-3 மாதங்களில் புதிய உதய் ரயில் முழுவீச்சில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க