• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மழை வேண்டி இரு ஆண்கள் திருமணம் !

August 5, 2017 தண்டோரா குழு

மத்திய பிரதேஷ்யில் மழைக்காக வருண பகவானின் கருணை வேண்டி, இரண்டு ஆண்கள் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை தந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக மழை சரியாக பெய்யாத காரணத்தால், வறட்சி ஏற்பட்டது.பருவமழையை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது. இதனால் சரியான விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் மத்திய பிரதேஷ், இன்டோர் மாவட்டத்தின் முசாகேதி என்னும் கிராமத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் உண்டு.

அந்த திருமணத்திற்கு அவர்களுடைய மனைவியும் குழந்தைகளும் வந்திருந்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு சுவையான திருமண விருந்து பரிமாறப்பட்டது. திருமணம் சடங்கின் தொடங்கி சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தங்கள் மனைவி குழந்தைகளுடன் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க