• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நண்பரை காப்பாற்றுவதற்காக கல்லீரல் தானம் செய்த இளைஞர்

August 3, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்தில் படிக்கும்போது, ஏற்பட்ட நட்பு காரணமாக, தனது கல்லீரலை தானமாக தந்து, தனது தோழியின் உயிரை காப்பாற்றிய கோபிநாத் என்ற இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புதுதில்லி அருகே உள்ள குர்கான் பகுதியில் பூஜா பட்நகர் என்னும் 44 வயது பெண், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் 17 ஆண்டுகளாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், அந்த நோயை கட்டுப்படுத்த மருந்துகளை தந்துள்ளனர். இருப்பினும், அந்த நோய் குணமாகாமல் இருந்ததை அடுத்து, அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தனது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, கல்லீரல் தேவைப்படுவதாக பூஜா தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சென்னை நகரை சேர்ந்த கோபிநாத் என்பவர் தனது கல்லீரலை தானமாக தர முன் வந்துள்ளார்.

“இது போன்ற சிகிச்சைக்கு உறவினர்களிடம் இருந்து தான் கல்லீரல் பெறவேண்டும் என்பது மருத்துவ சட்டம். ஆனால் தானம் தருபவருக்கும் நோயாளிக்கும் இடையே இருந்த பாச பிணைப்பை பார்த்தபிறகு, இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்தோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த அறுவை சிகிச்சை கடந்த ஜூலை மாதம், 21ம் தேதி நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு, இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். பூஜா இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு, வீட்டுக்கு திரும்புவார்” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து கோபிநாத் கூறுகையில்,

“10 ஆண்டுகளுக்கு முன் வேல்ஸ் நாட்டின் க்லாமொரன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, பூஜா வசித்து வந்த குடியிருப்பு அருகே வசித்து வந்தேன்,அப்போது இருந்தே பூஜாவின் குடும்பத்தை தனக்கு நன்றாக தெரியும். பூஜா தனக்குஒரு நல்ல தோழியாக இருந்தார். அவர்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்பி குர்கான் நகரில் வசித்து வந்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு படித்து முடித்து இந்தியாவுக்கு திரும்பிய பிறகு, பூஜாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தேன்.இந்த நேரத்தில் தான், பூஜாவுக்கு கல்லீரல் தேவைப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. ஒரு நல்ல தோழியை தான் எப்படி இழக்க முடியும். அதனால் தான், அவருடைய உயிரை காப்பாற்ற முடிவு செய்ததாக கோபிநாத் தெரிவித்தார்.

மேலும் படிக்க