• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் தாய்ப்பால் பற்றாக்குறையால் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் குழந்தைகள் இறப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

August 2, 2017 தண்டோரா குழு

தாய்பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாப்படுகிறது.

இந்நிலையில்,குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு அதிர்ச்சியையே தந்துள்ளது.

ஆய்வின் முடிவு பின்வருமாறு :

*ஒவ்வொரு வருடமும்இந்தியாவில் மட்டும் சுமார் 1 லட்சம் குழந்தைகள் தாய்ப்பால் பற்றாக்குறையால் இறக்கின்றனர்.

* சீனா, இந்தியா, நைஜீரியா, மெக்ஸிகோ மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டும் போதுமான அளவு தாய்ப்பால் அளிக்காததால், ஒவ்வொரு ஆண்டும் 2,36,000குழந்தைகளுக்கும் மேற்பட்டவர்கள் இறக்கின்றனர்.

* இந்த நாடுகளில் கணக்கிடப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்கால இறப்பு விகிதம் மற்றும் இழப்புகளின் அளவு சுமார் 119 பில்லியன் டாலர்களாக இருக்கும்.

* ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 194 நாடுகளில், உலகத்தில் உள்ள ஒரு நாடுகூட தாய்ப்பால் கொடுப்பதற்காக வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்கவில்லை.

குறிப்பாக 40% குழந்தைகளே 6 மாதம் தாய்ப்பாலை மட்டுமே உட்கொள்கின்றனர். 23 நாடுகளில் மட்டுமே 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது.

* குழந்தைகளுக்கு 6 மாதம் முழுமையான தாய்ப்பால் அளிக்க ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் ஆண்டுக்கு 4.7 டாலர்கள் செலவழித்தால் போதும். இதன்மூலம் ஆண்டுதோறும் சுமார் 5,20,000 குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற முடியும். இதனால் மருத்துவச் செலவுகள் குறைந்து, 10 ஆண்டுகளில் சுமார் 300 பில்லியன் டாலர்களை உருவாக்க முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க