• Download mobile app
30 Jan 2026, FridayEdition - 3642
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

125 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கிய தனுஷ்

August 2, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் 125 விவசாய குடும்பங்களை நேரில் அழைத்து அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் கடுமையான வறட்சியின் காரணமாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத சூழலில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

தமிழக விவாசாயிகளும் வறட்சி நிவாரணம் வேண்டி போராடி வருகின்றனர்.இந்நிலையில், நடிகர் தனுஷ் குடும்பத்தோடு போடிநாயக்கனூர் அடுத்த சங்கராபுரம் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு சென்றார். அப்போது, தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 125 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியளித்தார்.

அப்போது பேசிய தனுஷ்,

விவசாயிகளுக்கான இந்த உதவியை, என் அம்மா பிறந்த இந்த சங்கராபுரம் கிராமத்தில் கொடுப்பதைப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவுவேன் என்றார்.

மேலும் படிக்க