• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அமைச்சரின் சொத்துக்கள் முடக்கம்!

August 1, 2017 தண்டோரா குழு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து ஏப்ரல் 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் படி விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன் பின் விஜயபாஸ்கர், அவரது மனைவி, தந்தை ஆகியோர் ஆஜராகினர்.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கிவுள்ளதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த ஊரான திருவேங்கைவாசலில் உள்ள அவரது 100 ஏக்கர் நிலமும், குவாரியும் முடக்கப்பட்டுள்ளது.

வருமானவரித்துறை கடிதத்தை அடுத்து நிலத்தை முடக்கி புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க