கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு ஆதரவாக இந்தியாவின் இரும்புப்பெண் என்றழைக்கப்படும் இரோம் சர்மிளா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பான கக்கூஸ் ஆவணப் படத்தை இயக்கியவர் திவ்யபாரதி.இந்த ஆவணப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் இதனை பல்வேறு இடங்களில் திரையிட போலீசார் அனுமதி மறுத்து வந்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த திவ்யபாரதி கடந்த சில நாட்களுக்கு முன்பு 2009ல் மாணவராக இருந்த போது நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் திவ்யா மதுரை ஆனையுரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு ஆதரவாக இந்தியாவின் இரும்புப்பெண் என்றழைக்கப்படும் இரோம் சர்மிளா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், திவ்யாவின் கக்கூஸ் ஆவணப்படத்தை பார்த்தேன். நெகிழ்ந்து போனேன். அவருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அவருக்கு ஆதரவாக நான் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு