பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ததையடுத்து பாகிஸ்தான் நாட்டு புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டது.
இதையடுத்து,இந்த வழக்கில் இன்று தீரப்பு வழங்கிய அந்நாட்டு உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலகினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்