• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமலின் அடுத்த படம் தலைவன் இருக்கிறான்

July 27, 2017 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தின் தலைப்பை “தலைவன் இருக்கிறான்” என தற்போது அறிவித்துள்ளார். தற்போது இந்த தலைப்பு இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக தொகுத்து வழங்கி வருகிறார்.கமல் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் விஸ்வரூபாம் -2, சபாஸ் நாயுடு படங்களை அடுத்து தலைவன் இருக்கிறான் படத்தை எழுதி, இயக்கி நடிக்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ், இந்தியில் உருவாக இருக்கும் இந்தப்படத்திற்கு இந்தியில் அமர் ஹைன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கமல்ஹாசனுடன் முக்கியப்பாத்திரத்தில் பாலிவுட் நட்சத்திரம் சைஃப் அலிகான் நடிக்க இருக்கிறார். அமீர் கானுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும், அரசியல், நிதி மற்றும் நிழல் உலகம் பற்றிய த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

டுவிட்டர் மூலம் தமிழக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு வரும் நிலையில் இப்படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், அதற்கும் படத்திற்கு சம்பந்தம் இல்லை என்றும் 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்ட தலைப்பு தான் தலைவன் இருக்கிறான் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.தற்போது இந்த தலைப்பு இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேலும் படிக்க