• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்துல் கலாம்நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

July 27, 2017 தண்டோரா குழு

ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் டாக்டர். அப்துல் கலாம் தேசிய நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பில் நினைவகம் அமைக்கப்பட்டது.

இந்த மண்டபம் சுமார் 16 கோடி ரூபாயில் செலவில் கட்டப்பட்டுள்ளது. டாக்டர். அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதன் பின்னர் கலாம் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மோடி கலாம் குடும்பத்தினரையும் சந்தித்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள், தமிழக கட்சித் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க