• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் – மஃபா பாண்டியராஜன்

July 26, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வு விலக்கு தொடர்பான நல்லதொரு அறிவிப்பு நாளை வெளியாகும் என்று மஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.

இந்நிலையில், நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி நீட் தேர்வு விலக்கு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து 2 ஆண்டுகள் விலக்களிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க