• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாக்டர் அப்துல்கலாமின் மணிமண்டம் நாளை திறப்பு

July 26, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் மணிமண்டம்நாளை ராமேஸ்வரத்தை அடுத்த பேய்கரும்பில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

ராமேஸ்வரத்தை அருகே உள்ள பேய்கரும்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல்கலாம் நினைவு மணிமண்டபம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அப்துல்காலாமின் நினைவு நாளான நாளை இந்த மண்டபம் திறக்கப்பட உள்ளது. அதன் பின் பொதுமக்கள் பார்வைக்காக தினமும் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த மணிமண்டபத்தில் அரிய புகை படங்களும், ஓவியங்களும், அப்துல்கலாமின் இளமைபருவத்தில் இருந்து குடியரசுத் தலைவர்வரையிலான புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பிரதமரின் வருகையையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துணை ராணுவப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க