• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விண்டோஸில் இருந்து பெயின்ட் பிரஷ் ஆப் நீக்கம்

July 25, 2017 தண்டோரா குழு

பெயிண்ட் பிரஷ் ஆப்பை 32 வருடங்களுக்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் மூட முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம், 1985ம் ஆண்டு தந்து முதல் பதிப்பான விண்டோஸ் 1.௦ல் ‘எம்எஸ் பெயிண்ட்’ ஆப்பை அறிமுகம் செய்தது. இந்த ஆப் படங்களை வரையவும், எடிட் செய்ய பயன்படுத்தப்பட்டது. இது மைக்ரோசாப்ட்டின் அனைத்து கணினி இயக்க முறைகளுடன் பொருந்தக்கூடியதாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்காக எம்எஸ் பெயிண்ட் இருந்தது. ஆனால், தற்போது இந்த ஆப்பை 32 வருடங்களுக்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் மூட முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் அந்த நிறுவனம் வெளியிட்ட புதிய விண்டோஸ் 1௦ மாடலில் ‘பெயிண்ட் 3டி’ என்னும் புதிய ஆப்பை இணைக்கவுள்ளது. இதில் 3டி படங்களுக்கான புதிய கருவிகளை கொண்டுள்ளது. மேலும் 2டி பட எடிட்டிங் செய்யும் முறையும் உண்டு.

மேலும்,கேவன் ஜே. அட்டிபெர்ரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ‘கிளிப்பிட்’ என்னும் ஆங்கில பதிப்பையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2௦௦7ம் ஆண்டு மூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க