• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிவிட்டரில் இணைந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

July 25, 2017 தண்டோரா குழு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று டிவிட்டரில் இணைந்துள்ளார். சில மணி நேரத்திலேயே அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர்,பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தற்போது அவர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் இணைந்துள்ளார். தனது முதல் டிவிட்டாக நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக பொறுப்பெற்றுக்கொள்வதில் கவுரவம் அடைவதாகவும், என்னுடைய அனைத்து பொறுப்புக்களையும் மனிதாபிமானத்துடன் செய்வேன்” என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் இணைந்ததை தொடர்ந்து அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 மணிநேரத்தில் 3.28 மில்லியனாக அதிகரித்துள்ளது.

எனினும், ராம்நாத் கோவிந்த் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை மட்டுமே பின் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க