• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்டனையை ரத்து செய்யக் கோரி புதிய ஜனாதிபதிக்கு நீதிபதி கர்ணன் மனு

July 25, 2017 தண்டோரா குழு

தமக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் புதிய ஜனாதிபதியுடம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஓய்வுபெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனை ஜூன் 20ம் தேதி கொல்கத்தா போலீசார் கோவையில் கைது செய்தனர்.

இந்நிலையில், நீதிபதி கர்ணனின் தண்டனையை ரத்து செய்யக்கோரி புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கர்ணனின் வழக்கறிஞர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்ற உடனேயே காலை 11 மணிக்கு முதல் மனுவை மெயில் அனுப்பியுள்ளோம். இன்று கோரிக்கை மனுவை தபாலில் அனுப்ப உள்ளோம் என நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் தற்போது கொல்கத்தாவில் உள்ள பிரசிடன்ஸி சிறையில் உள்ளார்.

மேலும் படிக்க