• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘கோலி சோடா-2’ படத்தில் சமுத்திரக்கனி

July 25, 2017 தண்டோரா குழு

கோலி சோடா முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். கடந்த ஜூலை 10-ம் தேதி முதல் ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுமுகங்கள் நடித்து வரும் இப்படத்தில் ஒரு பகுதி மட்டும் கூடைப்பந்து விளையாட்டுப் பின்னணியில் அமைத்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மற்றும் கதாசிரியர் செம்பன் வினோத் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது மிக முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடித்து வருகிறார்.

இதுகுறித்து விஜய் மில்டன் கூறும்போது,

‘கோலி சோடா’வின் முதல் பாகத்தில் வந்து கலக்கிய ATM கதாபாத்திரத்தை போன்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார். அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் வருவார். அவரது தோற்றம் வித்தியாசமாகவும் பேசப்படும் விஷயமாகவும் இருக்கும் என்றார். மேலும், இதைத் தவிர இப்படத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. மிக வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது’. என்று கூறியுள்ளார்

மேலும் படிக்க