• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது

July 25, 2017 தண்டோரா குழு

ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி மதுரை ஆணையூரில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பான கக்கூஸ் ஆவணப் படத்தை இயக்கியவர் திவ்யபாரதி.இந்த ஆவணப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் இதனை பல்வேறு இடங்களில் திரையிட போலீசார் அனுமதி மறுத்து வந்தனர்.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த திவ்யபாரதி 2009ல் மாணவராக இருந்த போது நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதால் தற்போது கைது செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் திவ்யா மதுரை ஆனையுரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட திவ்யபாரதியை ஆகஸ்ட் 8வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவி வளர்மதி, மாணவர் குபேரன் வரிசையில் தற்போது திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க