• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கழிப்பறை கட்டமுடியாதவர்கள் மனைவியை விற்று விடுங்கள் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பேச்சு

July 24, 2017 தண்டோரா குழு

கழிவறை கட்ட முடியாதவர்கள் தங்களது மனைவிகளை விற்றுவிடுங்கள் என்று அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் மாவட்ட ஆட்சியர் கன்வால் தனுஜ் கலந்து கொண்டு பேசினார்.

ஒவ்வொருவரின் வீட்டிலும் கழிவறை கட்டாயமாக கட்டப்பட வேண்டும், அதற்கு அரசு உதவித்தொகையும் அளித்து வருகிறது என தனுஜ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது,குறிக்கிட்டு இடையில் பேசிய 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், தான் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவன் என்றும், அரசு தரும் மானியத்திலிருந்து முன்பணமாக ஒரு தொகையை தர வேண்டும் என கூறினார்.

இதனால், கோபமடைந்த ஆட்சியர் ஒரு கழிவறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் தான் செலவாகும் என்றும், அதை செய்ய முடியாவதவர்கள் தங்களது மனைவியை விற்றுவிடுங்கள் என்று கூறினார். இதனால் சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய தனுஜ், உங்கள் மனைவியின் பாதுகாப்புக்காக 12,000 ரூபாய் செலவு செய்யமாட்டீர்களா? இயற்கை உபாதைகளை கழிக்க செல்லும் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. ஆகையால் வீட்டில் கழிவறையை மனைவியின் நலனுக்காயினும் கட்டாயம் கட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையில், மாவட்ட ஆட்சியரின் இந்த சர்ச்சைப் பேச்சு தற்போது கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் படிக்க