July 24, 2017
தண்டோரா குழு
தமிழ் திரையுலகில் பல சாதனைகளை செய்தவர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது நடிகை தம்மன்னாவிற்கு டாக்டர் பட்டம் அளிக்கபட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு ‘கேடி’படத்தில் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் அறிமுகன நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இவருக்கு பெரும் திருப்பு முனையாக இருந்தது.
இந்நிலையில், ‘கான்பிடரேஷன் ஆஃப் இன்டர்நேஷனல் அக்ரிடிடேஷன் கமிஷன்’ என்ற இயக்கத்தின் சார்பில் நடிகை தமன்னாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவர், தற்போது விக்ரமுடன் இணைந்து ஸ்கெட்ச், பிரபுதேவாவுடன் இணைந்து காமோஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.