• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்திரயான்-2 2018-ற்குள் விண்ணில் செலுத்தப்படும் – மயில்சாமி அண்ணாத்துரை

July 21, 2017 தண்டோரா குழு

இஸ்ரோ மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ‘சந்திரயான்-2 செயற்கைகோள் 2018-ற்குள் ஏவப்படும்’ என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்த, மயில்சாமி அண்ணாதுரை இன்று ராமேஸ்வரம் வந்தார்.அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று அவரது அண்ணனை சந்தித்து அப்துல்கலாம் மணி மண்டபம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மிகச்சிறந்த மனிதர். இந்தியா மட்டுமல்லாமல் உலக மக்களிடம் ஒரு அடையாளமாக திகழ்ந்தவர். அவர் பிறந்த ஊரில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது.மேலும், அவருடைய ஆசைப்படி கடந்த இரண்டு மாதங்களில் 14 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் ‘சந்திரயான்-2’ செயற்கைகோள் 2018-ற்குள் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க