July 21, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் எல்லா துறையிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனிடையே ஆதாரத்துடன் மக்கள் ஊழல் புகார்களை அமைச்சர்களிடம் கொடுக்கும்படி கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் http://www.tn.gov.in/ministerslist என்ற இணையதள முகவரியையும் வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சில அமைச்சர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற தொடர்பு விவரங்கள் திடீரென காணமல் போய்வுள்ளது.
கமல்ஹாசனின் அறிக்கை எதிரொலியாக அமைச்சர்களின் தகவல் காணமால் போய்வுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றன.