• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ரோபோடிக்ஸ்’ போட்டியில் இந்திய மாணவர்கள் வெற்றி

July 20, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் நடந்த ‘ரோபோடிக்ஸ்’ போட்டியில் இந்திய மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்கவின் வாஷிங்டன் நகரில் நடந்த முதல் ரோபோடிக்ஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய உள்ளிட்ட சுமார் 157 உலக நாடுகள் கலந்துக்கொண்டது.

இந்தப்போட்டியில் கலந்துக்கொள்ள, இந்தியா சார்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரை சேர்ந்த ராகேஷ் தலைமையில்,ஆதிவ் ஷா, ஹர்ஷ் பாட், வாட்சின், அத்யன், தேஜாஸ், ராகவ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவர்கள் “Zhang Heng Engineering Design” பிரிவில் தங்க பதக்கமும், “Global Challenge Match” பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

மேலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய ராகேஷின் வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க