July 19, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 2௦ மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்து அதை பறக்கவிட போகிறது கூகுள் நிறுவனம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இதனை செயல்படுத்த உள்ளது. வோல்பாச்சியா என்னும் பாக்டிரியாவை ஆண் கொசுகளின் உடலில் கலப்பதால், அவற்றிற்கு மலட்டு தன்மை ஏற்படுகிறது. இதனால், பெண் கொசுகளுடன் சேர்ந்த பின், பெண் கொசுக்கள் முட்டையிடும்போது, அதிலிருந்து புதிய கொசுக்களை உருவாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கொசுக்களின் வளர்ச்சி முறியடிக்கப்படுகிறது.
ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது. இதனால் வோல்பாச்சியாவால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்பட போவதில்லை. கடந்த 3 ஆண்டுகளில், 3௦௦௦ மக்கள் சிக்கா மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வியாதியை உருவாக்கும் ‘ஏ.டி.ஸ் ’ வகை கொசுக்களை ஒழிப்பதை தான் இந்த முயற்ச்சியின் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.