• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி20 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த வீரரின் தந்தைக்கு கத்தி குத்து

July 17, 2017 தண்டோரா குழு

டி20 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ஜோகிந்தர் சர்மாவின் தந்தையை இளைஞர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 2007-ல் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஓவரில், சிறப்பாக பந்து வீசி இந்தியா வெற்றி பெற வழிவகுத்தவர் ஜோகிந்தர் சர்மா. இவர் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவர். ஜோகிந்தர் சர்மாதற்போது ஹிசாரில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார்.

இவரது தந்தை ஓம் பிரகாஷ் ஷர்மா ஹரியானாவில் உள்ள ரோட்டாக்கில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு 20 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் கடைக்கு வந்து கூல் டிரிங்க்ஸ் கேட்டனர். அதனை குடித்துவிட்டு திடீரென்று அவர்கள், ஓம் பிரகாஷ் சட்டைப் பையில் இருந்து பணத்தை பிடுங்கினர்.

அதனை ஓம் பிரகாஷ் தடுத்துள்ளார். அப்போது ஒருவன் கத்தியால் அவர் வயிற்றில் குத்தினான். வலியோடு அவர்கள் இருவரையும் அவர் பிடித்தார். ஆனால் அவர்கள் கல்லாவில் இருந்த ரூ.7 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.அதற்கு முன் கடையின் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இதையடுத்து, ரத்தக் காயத்துடன் அவரது இன்னொரு மகன் தீபக்கிற்கு போன் செய்தார். அவர் விரைந்து வந்து கதவை திறந்து ஓம் பிரகாஷை மருத்துவமனையில் சேர்த்தார்.
தற்போது அவர் நலமாக இருப்பதாக தீபக் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க