• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி போலீஸில் புகார்

July 12, 2017 தண்டோரா குழு

விஜய் டிவியின் பிக்பாஸ் ஆபாச நிகழ்ச்சியை தடை செய்ய்யகோரி கோரி இந்து அமைப்பு போலீசிடம் புகார் அளித்துள்ளது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி.யில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்ய கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் அமைப்பின் தலைவர் சிவா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்

அதில், ‘இந்திய மக்கள் மானமே முக்கியம் எனும் கொள்கை உடையவர்கள், இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டி.வி. நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் எவ்வித தொடர்பு இல்லாத ஏழு ஆண்களும், ஏழு பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும்,75 சதவிகிதம் நிர்வாணமாகவும் நடித்தும் வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியை பார்த்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் ‘தமிழர்கள் உயிரை விட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் 14 பேரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை காப்பாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க