• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே வாரத்தில் லாட்டரி பரிசு மூலம் கோடீஸ்வரியான இளம்பெண்

July 12, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு 4 கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ரோசா டோமின்க்யூ(19), கலிபோர்னியா கேஸ் ஸ்டேஷனில் 5 டாலர் கொடுத்து Power 5 scratch off ticket ஒன்றை வாங்கியுள்ளார். அதேபோல் கலிபோர்னியாவின் கிரீன்பீல்டின் கேஸ் ஸ்டேஷனில் 5 டாலர் கொடுத்து Lucky Fortune Scratcher ticket ஒன்றையும் வாங்கியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, முதலில் வாங்கிய டிக்கெட்டில் 555,555 டாலர் பரிசு விழுந்துள்ளது. இந்திய மதிப்பின்படி, 3 கோடி ஆகும். அதேபோல், இரண்டாவதாக வாங்கிய டிக்கெட்டில் 1௦௦,௦௦௦ டாலர் பரிசு விழுந்துள்ளது. இந்திய மதிப்பின் 64 லட்சம் ஆகும். அவருக்கு மொத்தம் 655,555 டாலர், இந்திய மதிப்பின்படி, 4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த பரிசுக்கு வரி ஏதும் விதிக்கப்படவில்லை.

“இரண்டு டிக்கெட்டிலும் பரிசு விழுந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த தொகையை கொண்டு இரண்டு கார்கள் வாங்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க